/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வரத்து குறைவால் முருங்கைகாய் விலை உயர்வு
/
வரத்து குறைவால் முருங்கைகாய் விலை உயர்வு
ADDED : பிப் 07, 2024 12:32 AM
கம்பம் : முருங்கைகாய் வரத்து குறைந்து தட்டுப்பாட்டால் விலை உயர்ந்து வருகிறது.
தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி, கடமலை - மயிலை, பெரியகுளம், கம்பம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் முருங்கை சாகுபடி செய்யப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் முதல் பிப். வரை முருங்கை காய் வரத்து இருக்காது. மீண்டும் மார்சில் துவங்கி மே வரை வரத்து இருக்கும். தற்போது முருங்கைகாய் வரத்து குறைந்து விட்டது.
இதனால் விலை கிலோ ரூ.60 முதல் ரூ.80 வரை அதிகரித்துள்ளது. மார்கெட்டில் ஒரு முருங்கை காய் ரூ.10க்கு விற்கப்படுகிறது.
உழவர் சந்தைகளிலும் முருங்கைகாய்க்கு தட்டுப்பாடு உள்ளது. கம்பம் உழவர் சந்தையில் நேற்று 32 டன் காய்கறி வரத்து இருந்த போதும், முருங்கை காய் வரத்து மிக குறைவால் விலை அதிகரித்து வருவதாக உழவர் சந்தை வட்டாரங்கள் கூறினர்.

