/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
இரு மாதங்களாக டி.எஸ்.பி., இல்லாததால் பெரியகுளத்தில் சட்டம் -ஒழுங்கு பாதிப்பு
/
இரு மாதங்களாக டி.எஸ்.பி., இல்லாததால் பெரியகுளத்தில் சட்டம் -ஒழுங்கு பாதிப்பு
இரு மாதங்களாக டி.எஸ்.பி., இல்லாததால் பெரியகுளத்தில் சட்டம் -ஒழுங்கு பாதிப்பு
இரு மாதங்களாக டி.எஸ்.பி., இல்லாததால் பெரியகுளத்தில் சட்டம் -ஒழுங்கு பாதிப்பு
ADDED : மார் 20, 2024 12:17 AM
பெரியகுளம் : பெரியகுளம் டி.எஸ்.பி., பணியிடம் காலியாக கிடப்பதால் சட்டம், ஒழுங்கு பிரச்னை அதிகரித்துள்ளது. 24 மணி நேரமும் மது பாட்டில் விற்பனை களை கட்டியுள்ளது.
பெரியகுளம் டி.எஸ்.பி .,கீதா கடந்த ஆண்டு டிசம்பரில் பணி மாறுதலில், சென்னை சென்றார் . உசிலம்பட்டி டி.எஸ்.பி.,யாக இருந்த நல்லு பெரியகுளம் டி.எஸ்.பி., ஆக மாற்றப்பட்டார். இவர் உசிலம்பட்டி தொகுதியில் இரு ஆண்டுகளாக பணிபுரிந்ததால் தேனி லோக்சபாவில் உள்ள பெரியகுளம் (தனி) தொகுதிக்கு உசிலம்பட்டி வருவதால் நல்லு, திருவண்ணாமலை மாவட்டத்திற்கு மாற்றப்பட்டார்.
இதன் பின் மதுரை அண்ணா நகர் உதவி ஆணையர் சூரகுமரன் பெரியகுளம் டி.எஸ்.பி., யாக மாறுதல் செய்யப்பட்டார். இவர் 18 நாட்கள் ஆகியும் பொறுப்பேற்க வில்லை.
இதனால் இரு மாதங்களாக தேனி எஸ். பி., அலுவலகத்தில் பல்வேறு பிரிவுகளில் டி.எஸ்.பி.,யாக பணிபுரியும் ஞானரவி தங்கதுரை, கருணாகரன், சக்திவேல் ஆகியோர் சுழற்சி முறையில் பெரியகுளம் டி.எஸ்.பி., பொறுப்பில் இருந்தனர்.
பெரியகுளம் சப்- டிவிஷன் தென்கரை, வடகரை, ஜெயமங்கலம், தேவதானப்பட்டி பகுதிகளில் 24 மணி நேரமும் மது பாட்டில் விற்பனையும், கஞ்சா விற்பனையும், சமூக விரோத செயல்கள் கொடிகட்டி பறக்கிறது.
இதனால் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகி உள்ளது. மேலும் தேர்தல் அனைத்து கட்சியினர் ஆலோசனைக் கூட்டம் டி.எஸ்.பி., இன்றி அவசர கதியில் நடந்து முடிந்துள்ளது.-

