/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பட்டத்திகுளத்தில் மடைகள் பழுதால் நீர் வெளியேறி பயிர்கள் சேதம் ஆயக்கட்டுதாரர்கள் ஆண்டு தோறும் அவதி
/
பட்டத்திகுளத்தில் மடைகள் பழுதால் நீர் வெளியேறி பயிர்கள் சேதம் ஆயக்கட்டுதாரர்கள் ஆண்டு தோறும் அவதி
பட்டத்திகுளத்தில் மடைகள் பழுதால் நீர் வெளியேறி பயிர்கள் சேதம் ஆயக்கட்டுதாரர்கள் ஆண்டு தோறும் அவதி
பட்டத்திகுளத்தில் மடைகள் பழுதால் நீர் வெளியேறி பயிர்கள் சேதம் ஆயக்கட்டுதாரர்கள் ஆண்டு தோறும் அவதி
ADDED : ஜன 09, 2025 05:50 AM

பெரியகுளம்: பட்டத்திக்குளம் கண்மாயில் இரு மடைகள் பழுதால் தண்ணீர் வெளியேறி பயிர்களை சேதமடைவதாக விவசாயிகள் வேதனைப்படுகின்றனர்.
பெரியகுளம் கும்பக்கரை ரோட்டில் மஞ்சளாறு வடிநிலக்கோட்டத்திற்கு உட்பட்ட பட்டத்திக்குளம் உள்ளது. இக் கண்மாய் 60 ஏக்கர் பரப்பளவு உடையது. கும்பக்கரை அருவியிலிருந்து வெளியேறும் நீர் வாய்க்கால் வழியாகவும், கண்மாய்க்கு தண்ணீர் வருகிறது. பெரும்பாலான மாதங்களில் கண்மாயில் நீர் நிறைந்து இருக்கும்.
நீரினால் கீழப்புரவு சச்சுமடையில் துவங்கி பூலாங்குளம் புரவு வரை 4 கி.மீ., தூரத்திற்கு முன்பு நூற்றுக்கணக்கான ஏக்கரில் சாகுபடி நடந்தது. எராளமான கிணறுகளுக்கு நீர் ஆதாரமாக உள்ளது. தற்போது கண்மாய் 30 சதவீதம் ஆக்கிரமிப்பில் உள்ளது. ஆக்கிரமிப்பை நீர் வளத்துறை அதிகாரிகள் கண்டு கொள்ளாததால் ஒவ்வொரு ஆண்டும் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருகிறது. கண்மாயில் எஞ்சிய பகுதிகளில் களைச் செடிகள் வளர்ந்து கண்மாயை பாழ்படுத்துகிறது.
ஆயக்கட்டுதாரர்கள் அனுமதி இன்றி மீன்பாசி ஏலம்
பட்டத்திகுளம் கண்மாய் நீரினை பயன்படுத்துவோர் சங்க தலைவர் சுந்தர்ராஜ் : கண்மாய்க்கு வரும் தண்ணீர் தேங்கி நிற்காமல் மேட்டுமடை, பள்ளத்துமடை இரு மடைகளும் சேதமடைந்துள்ளதால் தண்ணீர் வீணாகிறது. இதனால் கண்மாயை சுற்றியுள்ள தென்னை, மா மரங்கள் உட்பட 50 ஏக்கரில் தண்ணீர் தேங்கி பயிர்கள் சேதமடைகிறது. நமக்கு நாமே திட்டத்தில் மடைகள் பழுதுபார்க்கவும், கண்மாய் சீரமைப்பு செய்ய நீர்வளத்துறையிடம் கோரிக்கை வைத்துள்ளோம். ஆயக்கட்டுதாரர்களுக்கு அனுமதியில்லாமல் கடந்தாண்டு மீன் பாசி ஏலம் ரூ.3.29 லட்சத்திற்கு விடப்பட்டது. ஆனால் ஏலம் எடுத்தவர் பணம் செலுத்தாததால் ஏலத்தை ரத்து செய்து விட்டனர். ஆயக்கட்டுதாரர்களுக்கு மீன் பாசி ஏலம் வழங்கி இருந்தால் கண்மாயை நாங்களே பராமரிப்பு செய்திருப்போம். நீர் வளத்துறை அவசரம் அவசியம் கருதி மடைகளை சீரமைக்க வேண்டும்.
பட்டத்திகுளம் பாதியாக மாறியது
நந்தினி, விவசாயி, பெரியகுளம்: இக் கண்மாய் ஆக்கிரமிப்பால் விவசாயத்தின் மீது நம்பிக்கை குறைகிறது. ஆக்கிரமிப்பு அகற்றி கண்மாய் நிரம்பினால் சுற்றுப்பகுதிகளில் பல நூறு கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்து ஆண்டு முழுவதும் விவசாயத்திற்கு பயன்படும். முன்பு இக்கண்மாயை பார்க்கும்போது கண்ணுக்கு எட்டிய தூரம் அலை அலையாக கடல் போல் தண்ணீர் தேங்கி நிற்கும். தற்போது ஆக்கிரமிப்பினால் பட்டத்திகுளம் 'பாதிகுளமாக' மாறி வருகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.