/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சாக்கடை வசதியில்லாததால் வீடுகளுக்கு முன் தேங்கும் கழிவு நீர் மல்லிங்காபுரத்தில் அடிப்படை வசதி இன்றி சிரமம்
/
சாக்கடை வசதியில்லாததால் வீடுகளுக்கு முன் தேங்கும் கழிவு நீர் மல்லிங்காபுரத்தில் அடிப்படை வசதி இன்றி சிரமம்
சாக்கடை வசதியில்லாததால் வீடுகளுக்கு முன் தேங்கும் கழிவு நீர் மல்லிங்காபுரத்தில் அடிப்படை வசதி இன்றி சிரமம்
சாக்கடை வசதியில்லாததால் வீடுகளுக்கு முன் தேங்கும் கழிவு நீர் மல்லிங்காபுரத்தில் அடிப்படை வசதி இன்றி சிரமம்
ADDED : ஜன 04, 2025 04:35 AM

- போடி: போடி ஒன்றியம், சிலமலை ஊராட்சிக்கு உட்பட்ட 11 வது வார்டு மல்லிங்காபுரத்தில் ,சாக்கடை வசதி இல்லாததால் கழிவுநீர் வீடுகளுக்கு முன் தேங்கும் அவலநிலை உருவாகி உள்ளது.
இவ்வூராட்சியின் 11 வது வார்டில் வடக்கத்தி காளியம்மன் கோயில் தெரு, தெற்கு காலனி, மேற்கு காலனி, கிழக்கு தெரு, கருப்பசாமி கோயில் தெரு, மந்தையம்மன் கோயில் தெருக்களில் பகுதியில் 150 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில் தெருக்கள் முறைப் படுத்தாததால் பாதை இருந்தும் ரோடு வசதி இன்றி நடந்து செல்லக்கூட முடியாத அளவிற்கு பாதை குண்டும், குழியுமாக உள்ளது. சாக்கடை வசதி இல்லாததால் கழிவுநீர் வீடுகளுக்கு முன்பு குளம் போல தேங்கியுள்ளது. காளியம்மன் கோயில் கிழக்கு தெருவில் மின் கம்பம் சேதம் அடைந்து உள்ளது. தெருக்களில் தேங்கும் குப்பை அகற்றாமல் துர்நாற்றம் வீசி சுகாதாரகேடு ஏற்படுகிறது. அடிப்படை வசதிகள் செய்து தர மக்கள் தொடர்ந்து வலியுறுத்தியும் எந்த பயனும் இல்லை. ஊராட்சியில் நிலவும் பிரச்சனை குறித்து கிராம மக்கள் கூறியதாவது :
மாயமான மின் மோட்டார் ரோடு வசதி தேவை
செல்வம், மல்லிங்காபுரம் : கருப்பசாமி கோயில் தெரு, மந்தையம்மன் கோயில் தெருவில் ரோடு வசதி இல்லை. மழைநீர் வடிகால் வசதி இல்லாததால் தெரு சேறும் சகதியுமாக உள்ளது. கனமழை பெய்தால் வீடுகளுக்குள் மழை நீர் சென்று விடுகிறது. பிள்ளையார் கோயில் அருகே உள்ள தரைமட்ட நீர்த்தேக்க தொட்டியின் மின் மோட்டார் பழுது நீக்க ஊராட்சி நிர்வாகம் மோட்டாரை எடுத்து சென்று 2 ஆண்டிற்கு மேல் ஆகியும் இதுவரை சரி செய்யவில்லை. வேறு மோட்டாரும் பொருத்தப்படவில்லை. சிலமலை செல்லும் ரோட்டில் கொட்டப்படும் குப்பை அகற்றப்படாமல் உள்ளது. இதனால் அருகே குடியிருக்கும் மக்களுக்கு துர்நாற்றம் வீசுகிறது. மேற்கு தெருவில் மின்கம்பம் இருந்தும் விளக்கு வசதி இல்லாததால் இருளில் மூழ்கியுள்ளது. தெருக்களை முறைப்படுத்தி ரோடு, சாக்கடை அடிப்படை வசதிகள் செய்திட வேண்டும்.
தெருவிளக்கு வசதி தேவை
ஜெயக்கொடி, மல்லிங்காபுரம் : தெருக்களில் சாக்கடை சுத்தம் செய்யாததால் கழிவு நீர் தேங்கி புழுக்கள் உருவாகி உள்ளது. இதனால் ஏற்படும் கொசு தொந்தரவு அதிகம் உள்ளது. கொசு மருந்தும் அடிப்பது இல்லை. தெருவிளக்குகள் எரிவதில்லை. காளியம்மன் கோயில் கிழக்கு தெருவில் மின்கம்பம் சேதம் அடைந்து ஓராண்டாக மாற்றி அமைக்கப்படாமல் உள்ளது. மூன்று நாட்களுக்கு ஒரு முறை குறிப்பிட்ட நேரம் மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. நடுத்தெருவில் தண்ணீர் தொட்டி பயன்பாடு இன்றி காட்சி பொருளாக உள்ளது. போர்வெல் நீரை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. தண்ணீர் தொட்டி, தெரு விளக்கு வசதிகள் செய்து தர ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.