/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
இ - ஆக்சன் ஏல மையங்களில் வியாபாரிகள் ஏலக்காய் பதிய தடை கேரள உயர்நீதிமன்ற தீர்ப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி

ADDED : மார் 11, 2024 06:58 AM
கம்பம்: ஏலக்காய் இ ஆக்சன் மையங்களில் விவசாயிகளின் காய்களை மட்டுமே விற்பனைக்கு பதிய அனுமதிக்க வேண்டும் என்றும், வியாபாரிகள் பதிய தடை விதித்து, கேரள மாநில ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இந்தியாவில் இடுக்கி மாவட்டத்தில் மட்டும் 2 லட்சம் ஏக்கரில் ஏலக்காய் சாகுபடியாகிறது. ஏலக்காய் விற்பனை ஸ்பைசஸ் வாரியத்தின் லைசென்ஸ் பெற்ற ஆக்சன் கம்பெனிகளில் பதிவு செய்து விற்பனை செய்ய வேண்டும்.
இதற்கென போடி, புத்தடி என 2 இடங்களில் இ ஆக்சன் மையங்கள் இயங்குகின்றன.
வாரத்தில் ஆறு நாட்கள் காலை, மாலை என 2 நிறுவனங்கள் ஏலம் நடத்தின. தற்போது 14 நிறுவனங்கள் ஏலம் நடத்துகின்றன.
இ ஆக்சன் சென்டர்களில் விவசாயிகளின் காய்களை ஏல நிறுவனங்கள் விற்பனைக்கு பதிவு செய்யும்.
அதே நேரத்தில் வியாபாரிகளும் விற்பனைக்கு என, காய்களை பதிவு செய்வது தொடர்கிறது. இது தொடர்பாக வண்டன் மேடு கார்டமம் குரோவர்ஸ் அசோசியேசன் சார்பில் கேரள ஐகோர்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கை விசாரித்த ஐகோர்ட், 'ஏலக்காய் சாகுபடி செய்யும் விவசாயிகள் மட்டுமே இ ஆக்சன் சென்டர்களில் பதிவு பண்ணி விற்பனை செய்ய வேண்டும். காய்களை கொள்முதல் செய்ய வரும் வியாபாரிகளும் பதிவு செய்வது தவறு.
எனவே இனிமேல் வியாபாரிகள் இ ஆக்சன் மையங்களில் ஏலக்காய் பதிவு செய்து, விற்பனை செய்ய தடை விதிக்கப்படுகிறது.
விவசாயிகளின் காய் மட்டுமே பதிவு செய்து விற்பனை செய்ய வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது. இத்தீர்ப்பால் மறுபதிவு (Repolling) என்பது தடுக்கப்படும் என்று விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.