ADDED : டிச 14, 2025 06:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி: போடி - மூணாறு செல்லும் ரோட்டில் மேம்பாலம் பணியை விரைந்து முடிக்கவும், போடி - சென்னை செல்லும் ரயிலை தினமும் இயக்கவும், அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தி சி.டி., ஸ்கேன் வசதி அரசு ஏற்படுத்தி தருவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இ.கம்யூ., சார்பில் போடியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
போடி நகர துணை செயலாளர் முருகேசன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பெருமாள், துணை செயலாளர் கல்யாண சுந்தரம், பொருளாளர் பாண்டி, மாவட்ட குழு உறுப்பினர் ரவி முருகன், செயற்குழு உறுப்பினர்கள் சத்யராஜ், கர்ணன், போடி நகர துணை செயலாளர் அப்துல் ரஹீம், நகர பொருளாளர் ஜெயராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

