/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அரசு பள்ளி மாணவர்கள் இடையே சமரசம் செய்த கல்வி அதிகாரிகள்
/
அரசு பள்ளி மாணவர்கள் இடையே சமரசம் செய்த கல்வி அதிகாரிகள்
அரசு பள்ளி மாணவர்கள் இடையே சமரசம் செய்த கல்வி அதிகாரிகள்
அரசு பள்ளி மாணவர்கள் இடையே சமரசம் செய்த கல்வி அதிகாரிகள்
ADDED : மார் 19, 2024 05:45 AM
ஆண்டிபட்டி: கொண்டமநாயக்கன்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் 305 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.
இப்பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் சிலர் அதே பள்ளியில் படிக்கும் சில மாணவிகளை கிண்டல் செய்துள்ளனர். பாதித்த மாணவிகள் பெற்றோருடன் ஆண்டிபட்டி போலீசில் தகவலாக தெரிவித்தனர்.
நடவடிக்கையில் தாமதம் ஏற்பட்டதாக தெரிவித்து, 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் பள்ளி வளாகத்தில் கூடினர்.
மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து வெளியே வந்தனர். இதனால் பள்ளி வளாகத்தில் குழப்பமான சூழல் ஏற்பட்டது. ஆண்டிபட்டி டி.எஸ்.பி., ராமலிங்கம், இன்ஸ்பெக்டர் சரவணகுமார், பேரூராட்சி முன்னாள் தலைவர் ராமசாமி, தி.மு.க., நகர் செயலாளர் சரவணன் ஆகியோர் மாணவர்கள் பெற்றோர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை.
இதனைத் தொடர்ந்து மாவட்ட கல்வி அலுவலர்கள் வசந்தா, ஜான்சன் ஆகியோர்கள் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
நடந்த சம்பவத்திற்கு சம்பந்தப்பட்ட மாணவர்கள் மன்னிப்பு கேட்டபின் சமரசம் ஏற்பட்டது. இது போன்ற நிகழ்வுகள் பள்ளி வளாகத்தில் வரும் காலங்களில் தவிர்க்கப்பட வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

