/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கல்வித்துறை இலக்கிய மன்ற போட்டிகள் இன்று துவக்கம்
/
கல்வித்துறை இலக்கிய மன்ற போட்டிகள் இன்று துவக்கம்
ADDED : அக் 08, 2025 07:27 AM
தேனி, : கல்வித்துறை சார்பில் ஆறாம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இலக்கிய மன்ற போட்டிகள் தமிழ், ஆங்கிலத்தில் நடத்தப்படுகின்றன. இதில் பேச்சு, கவிதை, கட்டுரை எழுதுதல், கதை கூறுதல், வினாடி வினா உள்ளிட்ட போட்டிகள் நடக்கின்றன. வட்டார அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெறுகின்றனர்.
மாவட்ட அளவிலான போட்டிகள் தேனி நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, ஆர்.சி., உயர்நிலைப் பள்ளிகளில் நடக்கின்றன. இலக்கிய மன்ற போட்டிகள் இன்றும், வினாடி வினா போட்டிகள் நாளை, சிறார் திரைப்பட போட்டிகள் நாளை மறுதினமும் நடக்க உள்ளன என, கல்வித்துறையினர் தெரிவித்தனர்.