/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
முழு எழுத்தறிவு பெற்ற பகுதிகள் அறிவிக்க கல்வித்துறை நடவடிக்கை
/
முழு எழுத்தறிவு பெற்ற பகுதிகள் அறிவிக்க கல்வித்துறை நடவடிக்கை
முழு எழுத்தறிவு பெற்ற பகுதிகள் அறிவிக்க கல்வித்துறை நடவடிக்கை
முழு எழுத்தறிவு பெற்ற பகுதிகள் அறிவிக்க கல்வித்துறை நடவடிக்கை
ADDED : செப் 08, 2025 06:16 AM
தேனி : மாவட்டத்தில் சில ஊராட்சிகள், நகராட்சி பகுதிகளை முழுவதும் எழுத்தறிவு பெற்ற பகுதியாக அறிவிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கல்வித்துறையினர் கூறியதாவது: தமிழகத்தில் 95 சதவீத எழுத்தறிவு இருந்தால் அந்த பகுதியை முழு எழுத்தறிவு பெற்ற பகுதியாக அறிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தாண்டு 90 சதவீதம் எழுத்தறிவு இருந்தால் முழு எழுத்தறிவு பெற்ற பகுதியாக அறிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் துாத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்கள் முழு எழுத்தறிவு பெற்ற மாவட்டங்களாக தரம் உயர்ந்துள்ளன. மாவட்டத்தில் கடந்தாண்டு 10 ஆயிரம் பேருக்கு பாரத எழுத்தறிவு திட்டத்தில் அடிப்படை எழுத்துக்கள், கணித பயிற்சி வழங்கப்பட்டது. இந்தாண்டு இதுவரை 6500 பேர் இப்பயிற்சிக்காக தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அதே போல் மாவட்டத்தில் எத்தனை ஊராட்சிகள், பேரூராட்சி, நகராட்சிகள் முழு எழுத்தறிவு பெற்றுள்ளன என கணக்கெடுப்பு நடத்தி வருகிறோம். விரைவில் அதன் விவரங்களை வெளியிட உள்ளோம்., என்றனர்.