/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
காட்டு யானை தாக்கிய முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
/
காட்டு யானை தாக்கிய முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
காட்டு யானை தாக்கிய முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
காட்டு யானை தாக்கிய முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
ADDED : ஜன 29, 2024 06:27 AM

மூணாறு: போடிமெட்டு அருகே சின்னக்கானல் பி.எல். ராம் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிசிச்சை பெற்று வந்த முதியவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
பி.எல். ராம் பகுதியைச் சேர்ந்த சவுந்தர்ராஜன் 68. அப்பகுதியில் உள்ள தனது ஏலத்தோட்டத்தில் ஜனவரி 22 ல் வேலை செய்து கொண்டிருந்த போது சக்கை கொம்பன் (பலா கொம்பன்) ஆண் காட்டு யானை தாக்கியதில் பலத்த காயமடைந்தார். தேனி மருத்துவக் கல்லாரி மருத்துவமனையில் சிசிக்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
அதிகரிப்பு
சின்னக்கானல், சாந்தாம்பாறை ஆகிய பகுதியில் ஏழு பேரை கொன்ற அரிசி கொம்பனை கடந்த 2023 ஏப்ரல் 29ல் கேரள வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்த பின் பொது மக்கள் நிம்மதி அடைந்தனர்.
ஏற்கனவே சக்கை கொம்பனிடம் சிக்கி சிலர் பலியான நிலையில் தற்போது சவுந்தர்ராஜன் இறந்ததால் பொதுமக்கள் இடையே மீண்டும் அச்சம் அதிகரித்துள்ளது.