/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சிறுமி பலாத்கார முயற்சிமுதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை
/
சிறுமி பலாத்கார முயற்சிமுதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை
சிறுமி பலாத்கார முயற்சிமுதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை
சிறுமி பலாத்கார முயற்சிமுதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை
ADDED : நவ 28, 2024 05:52 AM

தேனி: தேனி மாவட்டம், பெரியகுளம் தாலுகாவில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முயற்சித்த 75 வயது முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பெரியகுளம் தாலுகாவை சேர்ந்த 5 வயது சிறுமி 2023ல் மார்ச் 13ல், தனது வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்தார். பெற்றோர் வீட்டின் பின்புறம் கொட்டகையில் ஆடுகளுக்கு தீவனம் கொடுத்துக் கொண்டிருந்தனர்.
அங்கு வந்த 75 வயது முதியவர் காமாட்சி, விளையாடிய சிறுமியை ஏமாற்றி தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்ய முயன்றார். இதை சிறுமியின் உறவினர் பார்த்து, பெற்றோரிடம் தகவல் அளித்தார். பெற்றோர் அந்த வீட்டிற்கு சென்று, சிறுமியை மீட்டனர். பெற்றோர் புகாரில் ஜெயமங்கலம் போலீசார் முதியவர்மீது போக்சோவில் கைது செய்தனர். இந்த வழக்கு தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
விசாரணை முடிந்து நேற்று, குற்றவாளி முதியவர்காமாட்சிக்கு ஐந்தாண்டுகள் சிறை, ரூ.40 ஆயிரம் அபராதம் விதித்து, நீதிபதி கணேசன் தீர்ப்பளித்தார்.