/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அரசு மருத்துவமனை அருகே மயங்கி கிடந்த முதியவர்; கலெக்டர் உத்தரவில் சிகிச்சைக்கு அனுமதி

ADDED : ஏப் 27, 2025 07:03 AM
--பெரியகுளம், : தேவாரம் அருகேயுள்ள கோம்பையை சேர்ந்த முதியவர் ராஜாராம் 60, கால் புண்ணால் அவதிப்பட்டார். இவரை உறவினர்கள் பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு வெளியே விட்டு சென்றதால் வெயிலில் மயங்கி கிடந்தார். தகவலறிந்து கலெக்டர் ரஞ்ஜீத்சிங் உத்தரவில் முதியவர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
முதியவர் ராஜாராம் பிள்ளைகள் இருந்தும் தனியாக வசித்துள்ளார். இவருக்கு காலில் புண் ஏற்பட்டு உடல் நலம் பாதித்தது.
நேற்று காலை 11:00 மணிக்கு பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு ராஜாராமை அவரது உறவினர்கள் அழைத்து வந்து, மருத்துவமனைக்கு வெளியே விட்டு சென்றனர். நோயாளியுடன் உதவியாளர்கள் யாரும் இல்லை என கூறி மருத்துவமனை சிகிச்சைக்கு அனுமதிக்கவில்லை. வெயிலில் கிடந்த முதியவர் 2 மணிநேரமாக மயங்கி கிடந்தார். அங்கிருந்தவர்கள் இது குறித்து கலெக்டருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து கலெக்டர் மருத்துவ இணை இயக்குனர் கலைச்செல்வியிடம், நோயாளிக்கு உடனே சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து வெயிலில் கிடந்த முதியவர் ராஜாராம் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனை கண்காணிப்பாளர் குமார் கூறுகையில்,'ராஜாராம் உடன் யாரும் வராததால் சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது தொடர் சிகிச்சையில் உள்ளார். உடல் நலம் தேறி வருகிறார்,' என்றார்.-