/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
டூவீலர் விபத்தில் நடந்து சென்ற முதியவர் பலி
/
டூவீலர் விபத்தில் நடந்து சென்ற முதியவர் பலி
ADDED : செப் 29, 2025 06:15 AM
தேனி : தேனியில் ரத்தினம் நகர் பெரியகுளம் ரோட்டில் டூவீலர் மோதியதில் ரோட்டில் நடந்து சென்ற போடியை சேர்ந்த முதியவர் கோபால்ராஜ் 66, உயிரிழந்தார்.
போடி மேலச்சொக்கநாதபுரம் அமராவதி நகர் கோபால்ராஜ். இவர் உறவினர்களுடன் திண்டுக்கல் சென்று போடிக்கு காரில் திரும்பினார். வழியில் தேனி ரத்தினம் நகரில் உள்ள அங்காடிக்கு சென்றனர். பொருட்கள் வாங்கிய பின் காருக்கு செல்ல ரோட்டை கடந்தனர். அப்போது அல்லிநகரம் குறிஞ்சி நகர் மதன்குமார் 21, ஓட்டி வந்த டூவீலர் கோபால்ராஜ், மீது மோதி விபத்து நடந்தது. இதில் கோபால்ராஜ், டூவீலரில் உடன் வந்த பொம்மையகவுண்டன்பட்டி மாணிக்கம் 24, மதன்குமார் காயமடைந்தனர். காயமடைந்தவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிகிச்சையில் இருந்த கோபால்ராஜ் உயிரிழந்தார். இவரது மருமகன் மனோஜ்குமார் புகாரில் அல்லிநகரம் போலீசார் விசாரிக்கின்றனர்.