/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அரசுக்கு எதிராக யாசகம் பெற்று போராட்டம் நடத்திய மூதாட்டி பலி
/
அரசுக்கு எதிராக யாசகம் பெற்று போராட்டம் நடத்திய மூதாட்டி பலி
அரசுக்கு எதிராக யாசகம் பெற்று போராட்டம் நடத்திய மூதாட்டி பலி
அரசுக்கு எதிராக யாசகம் பெற்று போராட்டம் நடத்திய மூதாட்டி பலி
ADDED : செப் 04, 2025 11:50 PM

மூணாறு: பென்ஷன் வழங்காததை கண்டித்து யாசகம் பெற்று போராடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்த இரு மூதாட்டிகளில் ஒருவர் உடல் நல குறைவால் இறந்தார்.
கேரளாவில் நிதி பற்றாக்குறை உட்பட பல்வேறு காரணங்களால் முதியோர், விதவை உட்பட பல்வேறு பென்ஷன்கள் மாதம் தோறும் முறையாக அரசு வழங்குவதில்லை. அதனால் மருத்துவ செலவு உட்பட பல்வேறு தேவைகளுக்கு வசதி இன்றி முதியவர்கள் கடுமையாக சிரமப்பட்டு வருகின்றனர். 2023ல் தொடர்ந்து நான்கு மாதங்கள் பென்ஷன் முடங்கியது.
அதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இடுக்கி மாவட்டம், மூணாறு அருகே அடிமாலி, இருநூறு ஏக்கர் பகுதியைச் சேர்ந்த மரியகுட்டி, 87, பொழிந்த பாலம் பகுதியைச் சேர்ந்த அன்னாஅவுசேப் 89, ஆகியோர் அடிமாலி நகரில் 2023 நவ.7ல் மண் சட்டி ஏந்தி யாசகம் பெற்றனர். இருவரின் செயல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்ததுடன் அரசுக்கு பெரும் தலைவலி ஏற்படுத்தியது. இருவருக்கும் ஆதரவும், செல்வாக்கும் அதிகரித்து மாநிலத்தில் பிரபலமாகினர்.
பா.ஜ.வைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சரும் பிரபல மலையாள நடிகர் சுரேஷ்கோபி, காங்., மூத்த தலைவர் ரமேஷ் சென்னித்தலா ஆகியோர் இருவரையும் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்ததுடன் உதவிகளையும் வழங்கினர்.
அவர்கள் நடத்திய போராட்டம் பலன் கண்டது.
மரியகுட்டிக்கு உடனடியாக பென்ஷன் வழங்கிய அரசு அன்னா அவுசேப்பின் ஆவணங்களை சரி செய்யுமாறு உத்தரவிட்டு பிரச்னைக்கு முற்றுப் புள்ளி வைத்தது. அதன்பிறகு மரியகுட்டி பா.ஜ.,வில் இணைந்த நிலையில் அன்னா அவுசேப்க்கு வயது முதிர்வால் உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவர் நேற்று இறந்தார்.