/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேர்தல் விழிப்புணர்வு போட்டி கம்பம் மாணவி 6வது இடம்
/
தேர்தல் விழிப்புணர்வு போட்டி கம்பம் மாணவி 6வது இடம்
தேர்தல் விழிப்புணர்வு போட்டி கம்பம் மாணவி 6வது இடம்
தேர்தல் விழிப்புணர்வு போட்டி கம்பம் மாணவி 6வது இடம்
ADDED : ஜன 21, 2025 07:03 AM

தேனி: மாநில அளவில் நடந்த தேர்தல் விழிப்புணர்வு சுவர் ஓவியப்போட்டியில் கம்பம் ஆதி சுஞ்சனகிரி கல்லுாரி முதுநிலை மாணவி அபிநயா ஆறம் இடம் வென்றார்.
தேர்தல் ஆணையம் சார்பில் நுாறு சதவீதம் ஓட்டளிப்பதை வலியுறுத்தி பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு சுவர் ஓவியம் வரைதல், கட்டுரை, வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டது. மாவட்ட அளவில் முதல் இடம் வென்றவர்கள் மாநில போட்டிக்கு தகுதி பெற்றனர்.
மாநில போட்டியில் முதல் 10 இடங்களை பிடிப்பவர்களுக்கு பரிசு அறிவிக்கப்பட்டது. இதில் கம்பம் ஆதிசுஞ்சனகிரி கல்லுாரியில் முதுநிலை மாணவி அபிநயா 6ம் இடம் வென்றார்.
இவருக்கு தேசிய வாக்காளர் தினமான ஜன.,25ல் பரிசு வழங்கப்பட உள்ளது என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.