ADDED : மார் 20, 2026 05:27 AM
தேனி: தேனி கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் ரஞ்ஜீத்சிங் தலைமையில் சட்டசபை பொதுத்தேர்தல் அமலாக்க முகமைக் குழு ஆய்வுக்கூட்டம் நடந்தது. எஸ்.பி., சினேகப்பிரியா, டி.ஆர்.ஓ., ராஜகுமார், கம்பம், போடி சட்டசபை தொகுதி பொதுப்பார்வையாளர் வினய்பிராதப்சிங், செலவினப் பார்வையாளர் மனோஜ்குமார் சர்மா, ஆண்டிபட்டி ,பெரியகுளம் தொகுதி செலவினபார்வையாளர் ட்ராப்சிங் மீனா முன்னிலை வகித்தனர்.
கூட்ததில் பதட்டமான ஓட்டுச்சாவடிகள், ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், ஊடக சான்றளிப்பு கண்காணிப்பு மையத்தின் செயல்பாடுகள் பற்றி ஆலோசிக்கப்பட்டது. சந்தேகப்படும்படியான டிஜிட்டல் பண பரிவர்த்தனை, வங்கி பணப்பரிவர்த்தனைகளை கண்காணிக்க வலியுறுத்தப்பட்டது. தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கவிதா, ரஜத்பீடன், நல்லையா, சையத் முகைதீன் இப்ராஹீம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
