/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வரிவிதிப்பு மேல்முறையீட்டு குழு தலைவர் தேர்வு
/
வரிவிதிப்பு மேல்முறையீட்டு குழு தலைவர் தேர்வு
ADDED : ஜூலை 26, 2025 04:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி பேரூராட்சி 12 வது வார்டு கவுன்சிலர் முத்துராமன் வரிவிதிப்பு மேல் முறையிட்டு குழு தலைவராக பேரூராட்சி கவுன்சிலர்களால் தேர்வு செய்யப்பட்டார்.
இதற்கான தேர்தல் ஆண்டிபட்டி பேரூராட்சி அலுவலக கூட்ட அரங்கில் செயல் அலுவலர் எட்வின் ஜோஸ் முன்னிலையில்நடந்தது.
வி.சி.க.,வைச் சேர்ந்த கவுன்சிலர் முத்துராமன் வரிவிதிப்பு மேல் முறையிட்டு குழு தலைவராக கவுன்சிலர்களால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். ஓட்டெடுப்பில் 17 கவுன்சிலர்களில் தி.மு.க., சார்பில் 5, அ.தி.மு.க., சார்பில் 2, இந்திய கம்யூ.,1, மார்க்சிஸ்ட் கம்யூ.,1 ஆகியோர் ஓட்டளித்தனர்.