ADDED : மே 28, 2025 07:26 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி, : தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே மரங்கள், மரக்கிளைகள் விழுவது தொடர்கிறது. நேற்று முன்தினம் பழனிசெட்டிபட்டி வீரபாலாஜி நகரில் மின்கம்பம் சாய்ந்தது. இதனால் அப்பகுதி முழுவதும் மின் வினியோகம் நிறுத்தப்பட்டது.
நேற்று மின்வாரியத்தினர் சேதமடைந்த மின்கம்பத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து மின் வினியோகம் சீரடைந்தது.