/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மதுரை--போடி இடையே மின்சார ரயில்கள் இயக்கம் துவங்கியது: பயண நேரம் குறைவதால் பயணிகள் வரவேற்பு
/
மதுரை--போடி இடையே மின்சார ரயில்கள் இயக்கம் துவங்கியது: பயண நேரம் குறைவதால் பயணிகள் வரவேற்பு
மதுரை--போடி இடையே மின்சார ரயில்கள் இயக்கம் துவங்கியது: பயண நேரம் குறைவதால் பயணிகள் வரவேற்பு
மதுரை--போடி இடையே மின்சார ரயில்கள் இயக்கம் துவங்கியது: பயண நேரம் குறைவதால் பயணிகள் வரவேற்பு
ADDED : பிப் 05, 2025 07:09 AM

போடி மதுரை -- போடி மின் மயமாக்கும் பணி நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று முதல் சென்னை சென்ட்ரல்- - போடி, மதுரை -- போடி பாசஞ்சர் ரயில்கள் மின்சார ரயில்களாக நேற்று முதல் இயங்கத் துவங்கியது.
மதுரை- - போடி இடையே உள்ள 96 கி.மீ., துார அகல ரயில் பாதை ரூ.98.33கோடி செலவில் 2024 ஜனவரியில் மின்மயமாக்கும் பணி துவங்கியது. இதில் 25 ஆயிரம் வோல்ட் மின் பாதையாக மாற்றும் பணிகள் நிறைவு பெற்றது. நான்கு மாதங்களுக்கு முன்பு மின் பாதையில் 120 கி.மீ., வேகத்தில் சோதனை ஓட்டம் நடந்தது. இதில் உள்ள சிறு,சிறு குறைபாடுகள் சீரமைக்கப்பட்டது. கடந்த வாரம் இந்த வழித்தடம் மீது செல்லும் மின் இணைப்பு கம்பிகள் சீராக உள்ளதா என அறியவும், உபகரணங்களில் குறைபாடுகள், சீரான மின்வினியோகம் ஆகியவை 'பேன்டோகிராப்' கொண்டு மின் இணைப்பு பொருத்தப்பட்ட 'ஓவர் ஹெட் எக்யூப்மென்ட் இன்ஸ்பெக்ஷன்' (OHE INSPECTION CAR) ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம் நடந்தது. அதன்பின் இரு நாட்களுக்கு முன் இத் தடத்தில் 75 கி.மீ., வேகத்தில் எலக்ட்ரிக் லோகோ மோட்டிவ் மின்சார ரயில் இன்ஜின் இறுதி கட்ட சோதனை ஓட்டம் நிறைவு பெற்றது.
நேற்று முதல் சென்னை சென்ட்ரல் மதுரை மார்க்கமாக ஏ.சி., சிலிப்பர் உட்பட 18 பெட்டிகளுடன் அதிவிரைவு மின்சார ரயில் போடிக்கும், போடி - சென்னை சென்ட்ரலுக்கும் இயக்கப்பட்டன. இந்த ரயில் நேற்று மதுரையில் காலை 7:15 மணிக்கு புறப்பட்டு 9 : 15 மணிக்கு போடி வந்தடைந்தது.
மதுரை - போடி பாசஞ்சர் ரயில் 14 பெட்டிகளுடன் மின்சார இன்ஜின் மூலம் ரயில் இயக்கப்பட்டன. இந்த ரயில் மதுரையில் காலை 8:20 மணிக்கு புறப்பட்டு காலை 9:55 மணிக்கு போடி வந்தடைந்தது. மதுரை போடி இடையே மின்சார ரயில் இயக்கத்தால் விரைவாக வந்து சேர்ந்ததாக கூறி பயணிகள் வரவேற்றுள்ளனர்.
தினசரி இயக்க வேண்டும்
மாரிமுத்து, திருமலாபுரம், போடி.மின்சார இன்ஜின் பொருத்தப்பட்ட ரயில் இயக்கியது மகிழ்ச்சியளிக்கிறது. சென்னைக்கு இயக்கப்படும் ரயிலை தினசரி ரயிலாகவும், கூடுதல் படுக்கை வசதி கொண்ட பெட்டிகளுடன் இயக்க வேண்டும். திருச்சி வழியாக சென்னைக்கும், காலையில் போடியில் இருந்து மதுரைக்கும், மாலையில் மதுரையில் இருந்து போடிக்கும் தினமும் ரயில் இயக்கினால் மாணவர்கள், வியாபாரிகள், வேலைக்கு செல்லும் ஏராளமானோர் வந்து செல்ல வசதியாக இருக்கும். மாவட்ட மக்கள் பயன்பெறுவார்கள்.