/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மின்சார வினியோகத்தில் குளறுபடி அதிகாரிகள் கவனக்குறைவால் அவதி
/
மின்சார வினியோகத்தில் குளறுபடி அதிகாரிகள் கவனக்குறைவால் அவதி
மின்சார வினியோகத்தில் குளறுபடி அதிகாரிகள் கவனக்குறைவால் அவதி
மின்சார வினியோகத்தில் குளறுபடி அதிகாரிகள் கவனக்குறைவால் அவதி
ADDED : நவ 15, 2024 05:24 AM
கம்பம்: கம்பத்தில் மின்சார வினியோகத்தில் தொடர்ந்து குளறுபடிகள் நடந்து வருவதால் அதிகாரிகளின் கவனக் குறைவால் பொதுமக்கள் தொடர்ந்து அவதிப்பட்டு வருகின்றனர்.
கம்பம் நகரில் 20 ஆயிரம் மின் இணைப்புக்கள் உள்ளன. நகரை வடக்கு, தெற்கு ஏன இரண்டாக பிரித்துள்ளனர். ஒவ்வொரு பகுதியும் ஒரு உதவி பொறியாளர் கட்டுப்பாட்டில் உள்ளது. இரண்டு உதவிப் பொறியாளர்களும் உதவி செயற்பொறியாளர் கட்டுப்பாட்டில் உள்ளனர்.
மின் வினியோகத்தில் தினமும் குளறுபடிகள் நடக்கின்றன. நவ.13 ல் பராமரிப்பு பணிகளுக்கு என, மின் வினியோகம் நிறுத்தப்பட்டது. நிறுத்தப்பட்ட வினியோகம் நகரில் மாலை 5:45 மணிக்கு மீண்டும் வழங்கப்பட்டது. ஆனால் பெண்கள் மேல்நிலைப் பள்ளி தெரு, போர்டு ஸ்கூல் தெரு, பார்க் ரோடு, காந்திஜி வீதி, உழவர் சந்தை வீதி உள்ளிட்ட பல வீதிகளுக்கு இரவு 10:00 மணி வரை மின்சாரம் வினியோகிக்கப்பட வில்லை. இந்நிலையில் நேற்று காலை 11:00 மணிக்கு மீண்டும் அதே பகுதிகளுக்கு வினியோகத்தை நிறுத்தினார்கள். இதே போன்று தினமும் மின் வினியோகத்தில் நகரில் ஏதோ ஒரு பகுதியில் குளறுபடி செய்து வருவது தொடர்கிறது. இங்குள்ள அதிகாரிகள் இதுகுறித்து கவனம் செலுத்துவதில்லை.
'மரக்கிளைகளை வெட்டினார்கள், சர்வீஸ் ஒயர் மாற்றினார்கள்', என, நாள்தோறும் ஏதாவது ஒரு காரணத்தை கூறி பொது மக்களை பாடாய் படுத்துகின்றனர். செயற்பொறியாளரும், தேனியில் உள்ள மேற்பார்வை பொறியாளரும் கம்பம் மின்வாரிய அலுவலகத்தை ஆய்வு செய்ய வேண்டும். பொது மக்கள் பாதிக்கப்படாத வண்ணம் மின் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.