/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தோட்டத்தில் புகுந்த யானைகள் தென்னை, இலவ மரங்கள் சேதம்
/
தோட்டத்தில் புகுந்த யானைகள் தென்னை, இலவ மரங்கள் சேதம்
தோட்டத்தில் புகுந்த யானைகள் தென்னை, இலவ மரங்கள் சேதம்
தோட்டத்தில் புகுந்த யானைகள் தென்னை, இலவ மரங்கள் சேதம்
ADDED : ஜன 09, 2025 05:41 AM
கடமலைக்குண்டு: கடமலைக்குண்டு அருகே மலையை ஒட்டி உள்ள விவசாய நிலங்களுக்கு வந்து செல்லும் யானைகளால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.
கடமலைக்குண்டு அருகே உப்புதுறையைச் சேர்ந்தவர் மலைச்சாமி. இவரது நிலம் மலை அடிவாரத்தில் உள்ளது. இதில் தென்னை, மா, இலவ மரங்கள் வைத்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவில் கூட்டமாக வந்த யானைகள் மலைச்சாமி தென்னந்தோப்பில் இருந்த 20 தென்னை மரங்கள், 50க்கும் மேற்பட்ட இலவ மரங்களை சேதப்படுத்தி, சொட்டுநீர் பாசன குழாய்களையும் சேதப்படுத்தி உள்ளது.
இதே பகுதியில் சுந்தரம் தோட்டத்தில் 20 இலவ மரங்களை ஒடித்து சேதப்படுத்தி உள்ளது. வனப்பகுதியில் ஆக்கிரமிப்பு செய்துள்ள விவசாய நிலங்களிலும் இலவ மரங்களை சேதப்படுத்தி சென்றுள்ளது.
யானைகள் விளைநிலங்களில் சேதப்படுத்தியது தொடர்பாக வனத்துறையினர் தற்போது வரை சம்பவ இடத்திற்கு வரவில்லை என்று விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
யானைகள் கூட்டம் விவசாய நிலங்கள் குடியிருப்பு பகுதிகளில் வராமல் இருக்க வனத்துறை நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி உள்ளனர்.
காட்டு பன்றிகளால் சேதம்
வருஷநாடு அருகே சிங்கராஜபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பண்டாரவூத்து மலைக்கிராமம் செல்லும் ரோட்டில் விவசாயி மகாலிங்கம் தென்னை விவசாயம் செய்து வருகிறார். இப்பகுதியில் புதிதாக 100க்கும் மேற்பட்ட தென்னங்கன்றுகள் நட்டுள்ளார்.
இரு நாட்களுக்கு முன் விவசாய நிலத்திற்குள் புகுந்த காட்டுப் பன்றிகள் தென்னங்கன்றுகளை தோண்டி சேதப்படுத்தி உள்ளது.
பசுமலைத்தேரி பகுதியைச் சேர்ந்த விவசாயி லோகன்துரை நிலத்திலும் காட்டுப்பன்றிகளால் தென்னங்கன்றுகள் சேதம் அடைந்துள்ளன.
பாதிப்படைந்த விவசாய நிலங்கள் குறித்து கணக்கீடு செய்து அரசு மூலம் இழப்பீடு கிடைக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று இப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

