/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அய்யம்பட்டியில் நாளை ஜல்லிக்கட்டு 5 ஆயிரம் காளைகள் பாய்ச்சலுக்கு தயார் போட்டியில் பங்கேற்கும் காளைகளின் தகுதி விபரம்

ADDED : பிப் 17, 2024 06:03 AM
சின்னமனூர்: அய்யம்பட்டி நாளை (பிப்.18) ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளதால் 5 ஆயிரம் காளைகள் ஆன்லைனில் பதிவு செய்துள்ளனர்.
தேனி மாவட்டத்தில் பல்லவராயன்பட்டி மற்றும் அய்யம்பட்டியில் நடைபெறும் ஜல்லிக்கட்டு பிரசித்தி பெற்றது. கடந்தாண்டு பல்லவராயன்பட்டி ஜல்லிக்கட்டு முடிந்த பின் அய்யம்பட்டியில் நடந்தது. இந்தாண்டு அய்யம்பட்டி நாளை நடைபெறும் ஜல்லிக்கட்டில் பங்கேற்க 5 ஆயிரம் காளைகள் ஆன்லைனில் பதிவு செய்துள்ளன. தீவிர பரிசீலனைக்கு பின் 600 காளைகள் அனுமதிக்கப்பட உள்ளது.
காளைகளின் தகுதி என்ன
ஜல்லிக்கட்டில் பங்கேற்க காளைகள் எவ்வாறு தேர்வு செய்யப்படுகிறது, அதன் தகுதி என்ன என்று கால்நடை பராமரிப்பு துறை டாக்டர்கள் கூறுகையில், ''நாட்டு மாடாக இருக்க வேண்டும், 4 வயது நிரம்பியதாகவும், திமில் கண்டிப்பாக இருக்க வேண்டும். கொம்புகள் கூர்மையாக இருக்க கூடாது.
130 செ.மீ. உயரம், 200 கிலோ எடையில் காளை இருக்க வேண்டும். இந்த நிபந்தனைகளுக்கு பின் போட்டி நடைபெறும் இடத்தில் கால்நடை நோய் புலனாய்வு குழுவினர் போதை பொருட்கள் கொடுக்கப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்து அதன் பின்னரே ஜல்லிக்கட்டிற்கு அனுமதிப்போம் என்றனர். போட்டி ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.