/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
முறைகேட்டில் ஈடுபட்டவருக்கு சிறந்த விற்பனையாளர் விருது கூட்டுறவு வார விழாவில் பணியாளர்கள் வெளிநடப்பு

ADDED : நவ 19, 2024 05:56 AM
தேனி: தேனியில் நடந்த கூட்டுறவு வார விழாவில் முறைக்கேடு புகாருக்குள்ளான நபருக்கு சிறந்த விற்பனையாளர் விருது வழங்கியதால் மற்ற விற்பனையாளர்கள் அதிருப்தி அடைந்து வெளிநடப்பு செய்ததாக ரேஷன் கடைபணியாளர் சங்க மாநில நிர்வாகி பொன் அமைதி தெரிவித்தார்.
தேனி என்.ஆர்.டி., நகரில் கூட்டுறவு வார விழா நடந்தது. கலெக்டர் ஷஜீவனா தலைமை வகித்தார்.
எம்.பி., தங்கதமிழ்செல்வன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் டி.ஆர்.ஓ.,ஜெயபாரதி, பெரியகுளம் எம்.எல்.ஏ., சரவணக்குமார், கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளர் ஆரோக்கியசுகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விழாவில் கூட்டுறவுத்துறையில் சிறப்பாக பணிபுரிந்தவர்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்ட போது, விழாவில் கலந்து கொண்ட ரேஷன்கடை பணியாளர்கள் பலர் வெளியேறினர்.
இது குறித்து ரேஷன்கடை பணியாளர் சங்க மாநில நிர்வாகி பொன்அமைதி கூறுகையில், '2011ல் மண்ணெண்ணை முறைகேட்டில் ஈடுபட்ட தண்டபாணியை டிஸ்மிஸ் செய்தனர். பின் கடந்தாண்டு அவருக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கினர்.
இந்நிலையில் முறைகேட்டில் ஈடுபட்டவருக்கு சிறந்த பணியாளருக்கான விருது வழங்கப்பட்டது. இதனால் மற்ற பணியாளர்கள் அதிருப்பதி அடைந்து கூட்டத்தை விட்டு வெளியேறினோம்.' என்றார்.
கூட்டுறவு இணைப்பதிவாளர் ஆரோக்கிய சுகுமார் கூறுகையில், துணை பதிவாளர்கள் பரிந்துரையில் விருது வழங்கப்பட்டுள்ளது. புகார் இருந்தால் வழங்குங்கள் சரி பார்க்கிறேன். என்றார்.