ADDED : நவ 13, 2024 07:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நவ.,15ல் காலை 10:00 மணிக்கு துவங்குகிறது. முகாமில் மாவட்டத்தில் உள்ள தனியார்துறை நிறுவனங்கள் பங்கேற்கின்றன.
முகாமில் 10ம் வகுப்பு அதற்கு கீழ் கல்வித்தகுதி உடையவர்கள், பிளஸ் 2, ஐ.டி.ஐ., இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகள், பொறியியல் பட்டப்படிப்பு படித்தவர்கள் பங்கேற்கலாம். வேலை நாடுநர்கள் சுயவிபர நகல், கல்வி சான்று நகல்களுடன் முகாமில் பங்கேற்கலாம். மேலும் விபரங்களுக்கு 94990 55936 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். முகாமினை பயன்படுத்தி கொள்ளுமாறு கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.