ADDED : பிப் 09, 2025 05:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி நாடார் சரஸ்வதி கலை, அறிவியல் கல்லுாரியில் வேலை வாய்ப்பு வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. கல்லுாரி துணை முதல்வர் சரண்யா வரவேற்றார். தேனி மேலப்பேட்டை ஹிந்து நாடார்கள் உறவின்முறைத்தலைவர் ராஜமோகன் தலைமை வகித்தார்.
துணைத்தலைவர் கணேஷ், பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன் முன்னிலை வகித்தனர்.
கல்லுாரி செயலாளர் காசிபிரபு உள்ளிட்டோர் பங்கேற்றனர். தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி துணைத்தலைவர் ராஜவேலு, வங்கி மேலாளர் மகாலிங்கம், உதவி மேலாளர்கள் ஸ்டெபி, தட்சிணாமூர்த்தி வேலை வாய்ப்பு திறன்களை வளர்த்து கொள்வது, இலக்குகளை நிர்ணயித்து எவ்வாறு வெற்றி பெறுவது பற்றி விளக்கினர். வேலைவாய்ப்புத்துறை தலைவர் அகிலாவைஷ்ணவி நன்றி கூறினார்.