/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஆக்கிரமிப்பால் கண்மாய்க்கு மழை நீர் செல்வதில் சிக்கல்
/
ஆக்கிரமிப்பால் கண்மாய்க்கு மழை நீர் செல்வதில் சிக்கல்
ஆக்கிரமிப்பால் கண்மாய்க்கு மழை நீர் செல்வதில் சிக்கல்
ஆக்கிரமிப்பால் கண்மாய்க்கு மழை நீர் செல்வதில் சிக்கல்
ADDED : ஆக 22, 2025 02:41 AM
போடி: போடி மீனாட்சியம்மன் கண்மாய் அருகே உள்ள நீர்வரத்து ஓடை ஆக்கிரமிப்பில் உள்ளதால் கண்மாய்க்கு மழை நீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
போடி, குரங்கணி பகுதியில் பெய்யும் மழை நீரானது கொட்டகுடி ஆற்றின் வழியாக போடி அருகே உள்ள பங்காருசாமி கண்மாய், சங்கரப்பன் கண்மாய், மீனாட்சிபுரத்தில் உள்ள மீனாட்சியம்மன் கண்மாயில் கலக்கிறது. மீனாட்சியம்மன் கண்மாயை பொறுத்தவரை 100 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இக்கண்மாயில் நீர் தேங்குவதன் மூலம் சுந்தரராஜபுரம், விசுவாசபுரம், அம்மாபட்டி, பத்திரகாளிபுரம், மீனாட்சிபுரம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள கிணறுகளில் நீர் பெருகுவதோடு, 450 ஏக்கருக்கு மேல் பாசன வசதி பயன் பெறும். இதன் மூலம் கிராமங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாத நிலை உருவாகும். மீனாட்சியம்மன் கண்மாய் நீர்வரத்து ஓடை பகுதியின் இருபுறமும் ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டி இருந்தனர். ஓராண்டுக்கு முன்பு நீர்வளத் துறை மூலம் பெயரளவிற்கு ஆக்கிரமிப்பை அகற்றினர். தற்போது அகற்றப்பட்ட இடத்தில் மீண்டும் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளன. இதனால் கண்மாய்க்கு மழைநீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. கழிவு நீர் சீராக செல்ல முடியாமல் பாலிதீன், குப்பைகளாக தேங்கி துர்நாற்றம் வீசுவதோடு, அருகே குடியிருக்கும் மக்களுக்கு சுகாதாரகேடு ஏற்படுகிறது.
நீர்வரத்து ஓடை ஆக்கிரமிப்பை அகற்றி கண்மாயில் மழை நீரைத் தேக்கிட நீர்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.