sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

கேரளாவில் 5024 எக்டேர் வன நிலம் ஆக்கிரமிப்பு

/

கேரளாவில் 5024 எக்டேர் வன நிலம் ஆக்கிரமிப்பு

கேரளாவில் 5024 எக்டேர் வன நிலம் ஆக்கிரமிப்பு

கேரளாவில் 5024 எக்டேர் வன நிலம் ஆக்கிரமிப்பு


ADDED : ஜன 11, 2024 03:52 AM

Google News

ADDED : ஜன 11, 2024 03:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு : கேரளாவில் வனத்துறைக்கு சொந்தமான 5024.53 எக்டேர் வன நிலம் ஆக்கிரமிக்கப்பட்டது அறிக்கையில் தெரியவந்தது.

கேரளாவில் 2021-2022 ன் வருடாந்திர நிர்வாக அறிக்கையை வனத்துறை வெளியிட்டது.

அதில் வனத்துறைக்குச் சொந்தமான வன நிலம் 5624.53 எக்டேர் ஆக்கிரமிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. எர்ணாகுளம், கோட்டயம், இடுக்கி ஆகிய மாவட்டங்கள் உட்படும் ஹைரேஞ் வட்டாரத்தில் கூடுதல் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. மூணாறு டிவிஷனில் மட்டும் 1099.65 ஹெக்டர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

கோதமங்கலம், கோட்டயம், மாங்குளம், நிலம்பூர் வடக்கு, மண்ணார்காடு, நென்மாரா, வயநாடு வடக்கு ஆகிய வனத்துறை டிவிஷன்களிலும் ஆக்கிரப்புகள் அதிகம் உள்ளன. மறையூர், தென்மலை, நிலம்பூர் தெற்கு , ஆரளம், வயநாடு ஆகிய வனவிலங்கு சரணாலயங்களில் ஆக்கிரமிப்புகள் குறைவாகும். 2021 -20-22 ஆண்டின் அறிக்கை மிகவும் காலதாமதாக வெளியிடப்பட்ட நிலையில் 2022--2023 ஆண்டின் அறிக்கை வெளியிடப்படவில்லை.

இந்தாண்டு மார்ச்க்கு முன்பாக 2023-20-24 ஆண்டின் நிர்வாக அறிக்கை தயார் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடதக்கது.

கேரளாவில் 1954ல் 9846 சதுர கி.மீ. வனம் இருந்தது. 2009ல் 11309 சதுர கி.மீட்டராக அதிகரித்தது. தற்போது 11521.814 சதுர கி.மீ. சுற்றளவில் வனம் உள்ளதாக அறிக்கையில் கூறியுள்ளனர்.






      Dinamalar
      Follow us