/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
க.புதுப்பட்டியில் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கை துவக்கம்
/
க.புதுப்பட்டியில் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கை துவக்கம்
க.புதுப்பட்டியில் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கை துவக்கம்
க.புதுப்பட்டியில் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கை துவக்கம்
ADDED : அக் 26, 2025 04:16 AM
கம்பம்: க.புதுப்பட்டியில் ரோட்டின் இருபுறமும் ஒரு கி.மீ. தூரத்திற்கு உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற தேசிய நெடுஞ்சாலைத் துறை நடவடிக்கையை துவக்கி உள்ளது.
கம்பம் புதுப்பட்டி தேசிய அளவில் விபத்துக்கள் அதிகம் ஏற்படும் ஊர் என கண்டறியப் பட்டுள்து.
தேசிய நெடுஞ்சாலைத் துறை புதுப்பட்டியில் ஆக்கிரமிப்பு அகற்றி ரோட்டை அகலப்படுத்தினார்கள்.
இருந்த போதும் தற்போது ஊருக்குள் ஒரு கி.மீ. தூரத்திற்கு தேசிய நெடுஞ்சாலையின் இரு புறமும் அதிக ஆக்கிரமிப்புகள் உள்ளன.
சமீபத்தில் இங்குள்ள வழிபாட்டு தலத்தின் பக்கவாட்டில் வேலி அமைத்து ரோட்டை ஆக்கிரமித்துள்ளார்கள்.
நேற்று முன்தினம் தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் ஆக்கிரமிப்புகளை ஆய்வு செய்து உத்தமபாளையம் ஆர்.டி.ஒ. விற்கு கடிதம் வழங்கினர்.
ஆர்.டி.ஓ. செய்யது முகமது கூறுகையில், 'தேசிய நெடுஞ்சாலைத் துறை பரிந்துரையில் வருவாய் துறை மூலம் நில அளவை செய்து ஆக்கிரமிப்பு இருந்தால் பாரபட்சம் இன்றி அகற்றப்படும், என்றார்.