ADDED : மே 18, 2025 03:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி கம்மவார் சங்கம் பொறியியல் கல்லுாரியில் ஆண்டு விழா சங்க தலைவர் நம்பெருமாள்சாமி தலைமையில் நடந்தது. கல்லுாரி செயலாளர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார்.
தேனி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை முதல்வர் முத்துசித்ரா பேசினார். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சங்க பொதுச்செயலாளர் மகேஷ் பரிசு வழங்கினார். சங்க துணைத்தலைவர் பாண்டியராஜன், கல்லுாரி இணைச் செயலாளர் விஜயன், கம்மவார் மெட்ரிக் பள்ளி செயலாளர் சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கல்லுாரி முதல்வர் சீனிவாசராகவன் தலைமையில் பேராசிரியர்கள் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.