/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பொறியியல் கல்லுாரி பட்டமளிப்பு விழா
/
பொறியியல் கல்லுாரி பட்டமளிப்பு விழா
ADDED : மார் 17, 2024 06:31 AM
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி பாரத் நிகேதன் பொறியியல் கல்லூரியில் 22வது பட்டமளிப்பு விழா கல்லூரி குழுமத்தலைவர் மோகன் தலைமையில் நடந்தது.
துணைத் தலைவர்கள் பிரசன்ன வெங்கடேசன், ரேணுகா, சுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் அருள்குமார் வரவேற்றார். மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி முதல்வர் பழனிநாதராஜா மாணவ மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கினார். கம்ப்யூட்டர் சயின்ஸ், சிவில், மெக்கானிக்கல் எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ், எம்.பி.ஏ., எம்.சி.ஏ., ஆகிய பாடப்பிரிவுகளில் பயின்று தேர்ச்சி பெற்ற 220 மாணவ மாணவிகள் பட்டங்கள் பெற்றனர். விழாவில் கல்லூரி நிர்வாகிகள், பேராசிரியர்கள், துணை பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

