/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா
/
பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா
ADDED : ஆக 10, 2025 03:26 AM
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி பாரத் நிகேதன் பொறியியல் கல்லூரியில் 23ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடந்தது. கல்லூரி குழும தலைவர் மோகன் தலைமை வகித்தார்.
துணைத் தலைவர்கள் பிரசன்ன வெங்கடேசன், ரேணுகா, சுதா மீனாட்சி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் முனைவர் அருள்குமார் வரவேற்றார். மதுரை அண்ணா பல்கலை மண்டல வளாக துணை தலைவர் முனைவர் மாலதி மாணவ மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கி,இன்றைய வாழ்வியல் குறித்தும் மற்றும் தொழில் முனைவோருக்கு நல்வழி குறித்தும் பேசினார்.
சிவில் பாடப்பிரிவை சேர்ந்த மாணவி யுவசக்தி தேவி மாநில அளவில் 24 வது இடம் பெற்றதால் அவருக்கு பதக்கமும், 261 மாணவ மாணவிகளுக்கு பட்டமும் வழங்கப்பட்டன. விழா ஏற்பாடுகளை கல்லூரி மேலாளர் நாகேந்திரன், பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.