/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மாநில குத்துச்சண்டை போட்டியில் இன்ஜி.,கல்லுாரி மாணவர் முதலிடம்
/
மாநில குத்துச்சண்டை போட்டியில் இன்ஜி.,கல்லுாரி மாணவர் முதலிடம்
மாநில குத்துச்சண்டை போட்டியில் இன்ஜி.,கல்லுாரி மாணவர் முதலிடம்
மாநில குத்துச்சண்டை போட்டியில் இன்ஜி.,கல்லுாரி மாணவர் முதலிடம்
ADDED : டிச 07, 2024 08:14 AM
தேனி: தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லுாரி மாணவர் மாநில குத்துச் சண்டையில் முதலிடம் பெற்று, மாவட்டத்திற்கு பெருமை சேர்த்து சாதனை படைத்துள்ளார்.
அண்ணா பல்கலை பொறியியல் கல்லுாரிகளுக்கான மாநில குத்துச்சண்டை போட்டி நவ.24ல் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அரசு பொறியியல் கல்லுாரியில் நடந்தது.
இப்போட்டியில் தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லுாரியின் எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் துறையின் 2ம் ஆண்டு மாணவர் குருபிரசாத், 57 முதல் 60 கிலோ எடைப்பிரிவு போட்டியில் பங்கேற்று முதலிடம் பெற்றார்.
மேலும் இவர் பஞ்சாப் பல்கலை சார்பில் குருகாசி கல்லுாரியில் நடக்க உள்ள தேசிய குத்துச்சண்டைப்போட்டியில் அண்ணா பல்கலையின் சார்பில் கலந்து கொள்ள தகுதி பெற்றார். வெற்றி பெற்ற மாணவரை உறவின்முறை நிர்வாகிகள், ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்கள், கல்லுாரியின் செயலாளர்கள், முதல்வர், துணை முதல்வர்கள், வேலை வாய்ப்புத்துறை அலுவலர், உடற்கல்வி இயக்குனர்கள்,பேராசிரியர்கள், பெற்றோர் பாராட்டினர்.