/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் மூணாறில் களை கட்டிய விற்பனை
/
ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் மூணாறில் களை கட்டிய விற்பனை
ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் மூணாறில் களை கட்டிய விற்பனை
ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் மூணாறில் களை கட்டிய விற்பனை
ADDED : ஜன 01, 2026 05:49 AM

மூணாறு: மூணாறில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பழங்கள், பூக்கள், கேக் ஆகியவற்றின் விற்பனை களைகட்டியது.
மூணாறைச் சுற்றியுள்ள தேயிலைத் தோட்டங்களில் பல தலைமுறைகளாக தமிழர்கள் தொழிலாளர்களாக வேலை செய்து வருகின்றனர். அவர்கள் தோட்டங்களை நிர்வாகித்த ஆங்கிலேயர்களின் சில பழக்கங்களை தொடர்ந்து கடை பிடித்து வருகின்றனர். ஆங்கிலேயர்கள் சென்ற பிறகும் தோட்டங்களை நிர்வகிக்கும் அதிகாரிகளை புத்தாண்டு நாளில் சந்தித்து பழங்கள், கேக், இனிப்புகள் வழங்கி வாழ்த்து தெரிவிக்கின்றனர். அதனால் நகரில் பழம், பூக்கள், மாலை, கேக் ஆகியவற்றை விற்பனை செய்ய தற்காலிக கடைகள் ஏராளம் முளைக்கும். ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு மூணாறு நகரில் பூக்கள், பழங்கள் விற்பனை செய்ய ஏராளமான தற்காலிக கடைகள் உருவாகியிருந்தன. விற்பனை களை கட்டியது. தொழிலாளர்கள் விரும்பிய பொருட்களை வாங்கி சென்றனர்.