/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
குடிநீரில் குளோரினேசன் கலப்பதை உறுதி செய்வது... n காய்ச்சி குடிக்கவும் பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

ADDED : அக் 14, 2024 04:54 AM
கம்பம், அக்.14- 'தேனி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், ஊராட்சிகளில் குடிநீரில் சரியான விகிதத்தில் குளோரின் கலப்பதை உறுதி செய்ய வேண்டும்.' என, பொது சுகாதாரத்துறை, நகராட்சிகளின் மண்டல இயக்குனர், பேரூராட்சிகள், ஊராட்சிகளின் உதவி இயக்குனர், உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு உத்தரவிட்டு, கவனமாக குடிநீரை கையாள்வதுடன் பொது மக்கள் காய்ச்சி குடிக்கவும் அறிவுறுத்தியுள்ளது.
இம்மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர்ந்து கனமழை விட்டு, விட்டு பெய்து வருகிறது. இதனால் முல்லைப் பெரியாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஒடுகிறது.
மேகமலையில் பெய்து வரும் கனமழை காரணமாக மழைநீர் வெள்ளமாக சுருளி அருவி வழியாக முல்லைப் பெரியாற்றில் கலந்து வருகிறது. இது தவிர காட்டாற்று ஓடைகளில் இருந்து வரும் வெள்ள நீரும் கலந்து வருகிறது.
ஊராட்சிகளில் முல்லைப் பெரியாற்றில் உறைகிணறு அமைத்துள்ளனர். அதில், 'பம்பிங்' செய்து, சுத்திகரிப்பு செய்யாமல் அப்படியே குடிநீராக வினியோகம் செய்கின்றனர்.
இதனால் தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே ஊராட்சி நிர்வாகங்கள் குடிநீரில் குளோரின் உரிய விகிதத்தில் கலப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட சுகாதார வட்டார மேற்பார்வையாளர்கள் குடிநீர் வினியோகத்தை கண்காணிக்கவும் கேட்டுக் கொண்டுள்ளது. இதுதவிர பேரூராட்சிகள், நகராட்சிகளிலும் குடிநீரில் குளோரின் கலப்பதை அந்தந்த துப்புரவு அலுவலர்கள் ஆய்வு செய்து உறுதிப்படுத்த நகராட்சிகளின் மண்டல இயக்குனர், பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் வலியுறுத்தி உள்ளனர்.
மேலும் பொது மக்கள் குடிநீரை காய்ச்சி குடிக்கவும் பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.