UPDATED : ஜூன் 08, 2026 03:58 PM
ADDED : ஜூன் 08, 2026 03:52 PM
அ நிறம் | அளவு
ஆண்டிபட்டி:உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கண்டமனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் கண்ணன் தலைமை வகித்தார்.
மயிலாடும்பாறை வனக்காப்பாளர் சாந்தினி சுற்றுச்சூழல் அவசியம் குறித்து பேசினார். பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் எழிலரசி, பசுமை படை பொறுப்பாசிரியர் சரவணாதேவி, தன்னார்வலர் புவனேஸ்வரி ஆகியோர் செய்திருந்தனர். சுற்றுச்சூழல் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
