/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஆரம்ப சுகாதார நிலைத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு
/
ஆரம்ப சுகாதார நிலைத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு
ஆரம்ப சுகாதார நிலைத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு
ஆரம்ப சுகாதார நிலைத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு
ADDED : அக் 13, 2025 03:59 AM

கம்பம் காமயகவுண்டன்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆடாதொடை, முடக்கத்தான், துளசி, கீழாநெல்லி, அத்தி, உள்ளிட்ட பல்வேறு மூலிகைச் செடிகள் வளர்க்கப்பட்டு உள்ளன.
தேவைப்படும் பொது மக்கள் அதில் பறித்துத் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். அத்துடன் அந்த மூலிகைகளை பயன்படுத்துவது எப்படி என்றும் பொது மக்களிடம் விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
சிராசுதீன், சித்தா டாக்டர்:
ஆரம்ப சுகாதார நிலையத்தில் மூலிகை தோட்டம் ஏற்படுத்தி உள்ளேன். நல்ல பலன் தருகிறது. வரும் பொது மக்கள் துளசி, ஆடாதொடை, நொச்சி, துாதுவளை, நிலவேம்பு, பிரண்டை, கற்றாழை உள்ளிட்ட மூலிகைகளை பறித்து செல்கின்றனர். பக்க விளைவுகள் இல்லாத அதே சமயம் செலவு குறைந்த வைத்தியமாகும். மூலிகைச் செடிகளில் இருந்து வெளிவரும் ஆக்சிஜன் சுற்றுப்புறச் சூழலை மாசு படாமல் வைத்துக் கொள்ளும். கம்பம் நகரில் மூலிகை பண்ணை ஒன்றை துவங்கவும், வீடுகள். பள்ளி வளாகங்களில் வளர்க்க விழிப்புணர்வு பிரசாரம் செய்யவும் திட்டம் உள்ளது. தொண்டு நிறுவனங்களின் உதவியோடு இப்பணியை முன்னெடுக்க உள்ளோம்., என்றார்.
பசும்பொன், மருந்தாளுனர், ஆரம்ப சுகாதார நிலையம் : சுற்றுப்புறச் சூழல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஒவ்வொருவரும் அதை தடுக்க முயற்சிக்க வேண்டும். எங்கள் ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் மூலிகைத் தோட்டம் அமைத்து உள்ளோம்.
கம்பம் வளர்ந்து வரும் நகரம். கிடைக்கும் இடங்களில் மூலிகை செடிகள் வளர்க்கலாம். வீடுகள், பள்ளி வளாகங்களில் மூலிகைச் செடிகள் வளர்க்கலாம். இதற்காக தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம். பக்க விளைவுகள் இல்லாத மருந்துகளை எடுத்துக் கொள்வது நல்லது. அதற்கு மூலிகை செடிகள் பயன்படும். சுற்றுப்புறச்சூழல் பாதிப்பில் இருந்து தப்பிக்க மூலிகை தோட்டங்கள் உதவும்., என்றார்.