/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தீபாவளி பண்டிகைக்காக துவக்கப்பட்ட தற்காலிக இனிப்பு விற்பனை கடைகள் உணவுப் பாதுகாப்புத்துறை ஆய்வு அவசியம்

ADDED : அக் 13, 2025 04:01 AM
தேனி : ''தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தற்காலிகமாக இனிப்பு, காரம் விற்பனை கடைகள் துவங்கப்பட்டு உள்ளன. பொது மக்களுக்கு சுகாதாரமாக தயாரித்த உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய உணவுப்பாதுகாப்புத் துறையினர் ஆய்வு செய்ய வேண்டும்.'' என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தீபாவளி பண்டிகை என்றாலே பட்டாசுகளும், இனிப்புகளும் முக்கியத்துவம் பெறுகின்றன. இப்பண்டிகை தினத்தில் அண்டை வீட்டார்கள், நண்பர்கள், உறவினர்களுக்கு வீட்டில் இனிப்பு, காரம் தயாரித்து பிறருக்கு வழங்கி, மகிழ்ச்சியை பகிர்ந்து வந்தனர். கடந்த சில ஆண்டுகளாக வீடுகளில் இனிப்புகள் தயாரித்தாலும், மற்றவர்களுக்கு வழங்க கடைகளில் ஆர்டர்கள் செய்கின்றனர். பொது மக்களில் சிலர் நிறுவனங்களில் ஆர்டர்கள் எடுத்து மண்டபங்கள், தனியார் இடங்களில் செட் அமைத்து இனிப்பு, காரங்கள் தயாரிக்கின்றனர். இந்த இடங்களில் உணவு பொருட்கள் தயாரிப்பவர்கள் உரிய அனுமதி பெறவேண்டும் என்ற விதி இருந்தாலும் இது பின்பற்றப்படுவது இல்லை. சில நேரங்களில் இனிப்புகளில் அதிக நிறமிகள் சேர்த்தல், தரமற்ற எண்ணெய் பயன்பாடு உள்ளிட்டவற்றால் உடல் உபாதைகளும் ஏற்படுகின்றன.
பண்டிகைக்காக புதிதாக உருவாகி உள்ள கடைகள், இனிப்பு தயாரிப்பு இடங்களில் உணவுப்பாதுகாப்புத்துறையினர் ஆய்வுகள் செய்ய வேண்டும். பொதுமக்களுக்கு சுத்தமான, சுகாதாரமான உணவுகள் கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.