/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கதலி நரசிங்கப்பெருமாள் கோயில் வளாகத்தில் சுகாதார பாதிப்பு
/
கதலி நரசிங்கப்பெருமாள் கோயில் வளாகத்தில் சுகாதார பாதிப்பு
கதலி நரசிங்கப்பெருமாள் கோயில் வளாகத்தில் சுகாதார பாதிப்பு
கதலி நரசிங்கப்பெருமாள் கோயில் வளாகத்தில் சுகாதார பாதிப்பு
ADDED : அக் 13, 2025 04:03 AM
ஆண்டிபட்டி : ஜம்புலிபுத்துார் கதலி நரசிங்கப் பெருமாள் கோயில் வளாகத்தில் துாய்மைப் பணி மேற்கொள்ளாததால் சுகாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இக்கோயில் 800 ஆண்டுகளை கடந்த பழமையான கோயிலாகும். சனிக்கிழமைகளில் பல்வேறு கிராமங்களில் இருந்து பக்தர்கள் அதிகம் வந்து செல்கின்றனர். நடந்து முடிந்த புரட்டாசி வாரங்களில் கோயிலில் நடந்த சிறப்பு பூஜையில் காலை முதல் இரவு வரை நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். கோயில் வளாகத்தில் பக்தர்கள் சார்பில் வழங்கப்பட்ட அன்னதான நிகழ்ச்சியில் பயன்படுத்திய காதித, பாக்கு மட்டை தட்டுகள், பிளாஸ்டிக் டம்ளர்களை கோயில் வளாகம், தெப்பக்குளத்தை சுற்றியுள்ள பகுதிகளில் வீசிச் சென்றுள்ளனர். குவிந்து கிடக்கும் இவற்றை அப்புறப்படுத்த ஊராட்சி நிர்வாகம், கோயில் நிர்வாகம் முன் வரவில்லை. இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள், பொது மக்கள் முகம் சுளிக்கும் நிலை ஏற்படுகிறது. கோயில் வளாகத்தில் துாய்மை பணி மேற்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.