/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நாய்களால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
/
நாய்களால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
ADDED : அக் 13, 2025 04:11 AM

கூடலுார் : கூடலுார் மாநில நெடுஞ்சாலையில் நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளதால் டூவீலரில் செல்பவர்கள் விபத்தில் சிக்கி வருகின்றனர்.
கூடலுாரில் நாய்கள் கருத்தடை மையம் பல மாதங்களாக பயன்பாடின்றி உள்ளது. மாநில நெடுஞ்சாலை, மெயின் பஜார் உள்ளிட்ட முக்கிய வீதிகளில் கூட்டமாக நாய்கள் உலா வருவதால் பொது மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். மேலும் இறைச்சிக் கடைகளுக்கு முன் அதிகமாக முகாமிட்டு வருகின்றன. நடந்து செல்பவர்களை திடீரென கடிக்கும் சம்பவமும் அதிகரித்துள்ளது. பொது மக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் தொடர்ந்து புகார் செய்த வண்ணம் உள்ளனர். சமீபத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த சுகாதார பேரவைக் கூட்டத்தில் இதுகுறித்த புகாரை தன்னார்வ அமைப்பினர் பதிவு செய்தனர்.
உடனடியாக தெரு நாய்களை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக நகராட்சி நிர்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டது. இருந்த போதிலும் மாநில நெடுஞ்சாலையில் நாய்களின் தொந்தரவு குறையவில்லை. திடீரென ரோட்டின் குறுக்கே கூட்டமாக கடந்து செல்வதால் டூவீலரில் செல்பவர்கள் விபத்தில் சிக்கி வருகின்றனர். இதில் பலர் பலத்த காயமடைந்த சம்பவம் அதிகமாக உள்ளது.
உயிரிழப்பு சம்பவம் அதிகமாவதற்கு முன் தெரு நாய்களை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும் என, பொது மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.