நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி ஒன்றிய அலுவலகத்தில் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி பி.டி.ஓ.,சரவணன் தலைமையில் நடந்தது.
துணை பி.டி.ஓ., சக்திமுருகன் உறுதிமொழி வாசித்தார். உறுதி மொழி ஏற்பில் 'ஜாதி வேறுபாடுகள் இல்லாத சமத்துவ சமுதாயம் அமைக்கவும், சக மனிதர்களிடம் சமத்துவத்தை வாழ்நாள் முழுவதும் கடைபிடிப்பது என அனைத்து அலுவலர்களும் உறுதிமொழி ஏற்றனர்.