UPDATED : ஆக 06, 2026 05:23 PM
ADDED : ஆக 06, 2026 04:54 PM
அ நிறம் | அளவு
போடி:மேலச்சொக்கநாதபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் தேசிய பசுமைப்படை அமைப்பிற்கு தி கிரீன் லைப் பவுண்டேஷன், ரோட்டரி கிளப் ஆப் பான்யன் ட்ரீ அமைப்பு சார்பில் உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது. பவுண்டேஷன் தலைவர் நம்பிக்கை நாகராஜன் தலைமை வகித்தார்.
துணைத் தலைவர் விஸ்வநாதன், செயலாளர் சுந்தரம், ரோட்டரி கிளப் தலைவர் மணிகண்டன், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் சேகர், வனிதா, மனோகரன், பனைமுருகன், சந்திர சேகர், அர்ஜுனப் பெருமாள் முன்னிலை வகித்தனர். பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடவும், பராமரிப்பு செய்திடும் வகையில் மண்வெட்டி, கடப்பாரை, சீனாத்தட்டு, பூவாளி உள்ளிட்ட தளவாட பொருட்களை பவுண்டேஷன் சார்பில் தேசிய பசுமைப்படை அமைப்பிற்கு வழங்கினர்.
