/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஆண்டிபட்டி அருங்காட்சியகம் சார்பில் மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி
/
ஆண்டிபட்டி அருங்காட்சியகம் சார்பில் மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி
ஆண்டிபட்டி அருங்காட்சியகம் சார்பில் மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி
ஆண்டிபட்டி அருங்காட்சியகம் சார்பில் மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி
ADDED : ஏப் 25, 2025 07:02 AM
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அரசு அருங்காட்சியகம் சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டியில் பங்கேற்க காப்பாட்சியர் மருது பாண்டியன் தெரிவித்துள்ளார்:
அவர் தெரிவித்து இருப்பதாவது: ஆண்டிபட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அரசு அருங்காட்சியகம் செயல்படுகிறது.
இந்த அருங்காட்சியகத்தில் மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் தொல்லியல் கலை, கட்டிடக்கலை, விலங்கியல், புவியியல், மானுடவியல், நாட்டுப்புற கலைகள், தேனி மாவட்ட வரலாறு தொடர்பான பல தகவல்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இது முக்கிய அறிவுசார் சுற்றுலா தலமாகவும் உள்ளது.
கோடை விடுமுறையை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கான கட்டுரைப்போட்டி நடைபெற உள்ளது. 'அரசு அருங்காட்சியகம் ஆண்டிபட்டி' என்ற தலைப்பிலான கட்டுரை போட்டியில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் அருங்காட்சியகத்திற்கு நேரடியாக சென்று அங்குள்ள காட்சி பொருள்களை பார்த்து முடிவில் அருங்காட்சியகத்தின் ஏதேனும் ஒரு அறையில் நின்று 'ஜியோ டேக்கில் ஒரு செல்பி' புகைப்படம் எடுத்து, அத்துடன் தாங்கள் எழுதிய கட்டுரையினை இணைத்து மே 15ம் தேதிக்குள், காப்பாட்சியர் அரசு அருங்காட்சியகம், ஆண்டிபட்டி (தேனி) என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
கட்டுரை ஐந்து பக்கங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
கட்டுரையின் இறுதியில் கட்டுரையாளர் பெயர், முகவரி, அலைபேசி எண்ணை எழுதி அனுப்ப வேண்டும்.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு ,பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும். போட்டியில் பங்கு பெற்ற அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் சான்றுகள் வழங்கப்படும் என்றார்.