/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பள்ளிகள் திறந்து 20 நாட்கள் ஆகியும் புத்தகம், சீருடை வழங்கப்படவில்லை
/
பள்ளிகள் திறந்து 20 நாட்கள் ஆகியும் புத்தகம், சீருடை வழங்கப்படவில்லை
பள்ளிகள் திறந்து 20 நாட்கள் ஆகியும் புத்தகம், சீருடை வழங்கப்படவில்லை
பள்ளிகள் திறந்து 20 நாட்கள் ஆகியும் புத்தகம், சீருடை வழங்கப்படவில்லை
ADDED : ஜூன் 22, 2025 12:18 AM
தேனி:பள்ளிகள் திறந்து 20 நாட்கள் ஆகியும் சில பள்ளிகளில் முதலாம் வகுப்பு மாணவர்களுக்கு புத்தகம், சீருடைகள், கல்வி உபகரணங்கள் வழங்கப்படவில்லை.மாவட்டத்தில் அரசு தொடக்கப்பள்ளிகள் 325, நடுநிலைப்பள்ளிகள் 99 உள்ளன. இவற்றில் சுமார் 10ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் படிக்கின்றனர். இப்பள்ளிகளில் அனைத்து வகுப்புகளில் மாணவர்கள் சேர்க்கை நடந்தாலும், ஒன்றாம் வகுப்பு, 6ம் வகுப்புகளில் சேர்க்கை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கோடை விடுமுறைக்குப்பின் ஜூன் 2ல் பள்ளிகள் திறக்கப்பட்டன. கோடை விடுமுறையில் ஒன்றாம் வகுப்பிற்கு மாணவர்கள் சேர்க்கையை அரசுப்பள்ளிகள் துவங்கின. ஆனால் சில பள்ளிகளில் தற்போது வரை ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு புத்தகம், நோட்டுகள், சீருடைகள் வழங்கப்படவில்லை.
அதே போல் ஆறாம் வகுப்பில் புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கும் வழங்க வில்லை.
கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'எமிஸ் பதிவில் எத்தனை மாணவர்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதோ அதற்கு ஏற்றவாறு புத்தகங்கள், சீருடைகள் வழங்கப்பட்டுள்ளன. இதுவரை முதல் வகுப்பு மாணவர்களுக்கு தொகுதி 1 புத்தகங்கள் 8094 பேருக்கும், தொகுதி 2 புத்தகங்கள் 6,892 பேருக்கும் வழங்கப்பட்டுள்ளது. புதிதாக சேர்ந்தவர்களுக்கு புத்தகம் வழங்க தேவை பட்டியல் அரசுக்கு அனுப்பி உள்ளோம்', என்றார்.