/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பூமி பூஜை நடத்தி ஆறு மாதங்கள் கடந்தும் குடிநீர் தொட்டி அமைக்க பணி துவங்கவில்லை பண்ணைப்புரம் பேரூராட்சியில் ரூ.36 லட்சம் முடங்கிய அவலம்

ADDED : செப் 24, 2024 05:41 AM
உத்தமபாளையம்,: பண்ணைப்புரத்தில் குடிநீர் மேல்நிலை தொட்டி கட்ட ராஜ்யசபா எம்.பி. இளையராஜா ஒதுக்கிய ரூ.36 லட்சம் நிதியை பயன்படுத்தாமல் பேரூராட்சி நிர்வாகம் மெத்தனமாக உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கோம்பை, பண்ணைப்புரம், தேவாரம் பேரூராட்சிகளுக்கு குடிநீர் லோயர்கேம்பில் பம்பிங் செய்து சப்ளை செய்யப்படுகிறது. வாரம் ஒரு நாள் அல்லது 10 நாட்களுக்கு ஒரு முறை தான் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.
பண்ணைப்புரம் 3 வது வார்டில் குடிநீர் மேல்நிலை தொட்டி அமைக்க பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று இசையமைப்பாளர் இளையராஜா தனது எம்.பி. தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து ரூ.36 லட்சம் கடந்த ஆண்டு ஒதுக்கினார்.
இதில் ஒரு லட்சம் லி.,கொள்ளளவு குடிநீர் மேல்நிலை தொட்டி அமைக்க 6 மாதங்களுக்கு முன் பேரூராட்சி பூமி பூஜை நடத்தியது. ஆனால் இன்னும் பணி துவங்கவில்லை.
பேரூராட்சியில் விசாரிக்கையில், 'குடிநீர் தொட்டி கட்ட உத்தேசித்த இடத்தில் 4 புளிய மரங்கள் இருந்ததால், அந்த மரங்களை வெட்ட ஆர்.டி.ஓ., விடம் அனுமதி பெறுவதில் காலதாமதம் ஆகிவிட்டது. தற்போது பேசி அனுமதி பெற்று மரங்களை வெட்டியவுடன் பணிகள் துவங்கும் என்றனர்
உத்தமபாளையம் ஆர்.டி.ஒ தாட்சாயணி கூறுகையில், சம்பந்தப்பட்ட இடத்தை பேரூராட்சி நிர்வாகம் பெற நடவடிக்கை எடுக்கவில்லை. இடத்தை ஒப்படைப்பதற்கான பணி மேற்கொள்ள கூறி உள்ளேன்.
இதற்கான பணிகள் முடிந்ததும், மரங்கள் வெட்டுவதற்கான அனுமதி வழங்கப்படும் என்றார்.
பேரூராட்சி தலைவர் லட்சுமி கூறுகையில், சர்வேயர் இடத்திற்கான சர்வே எண்களை தவறுதலாக கூறி விட்டார். இடம் வருவாய்த்துறைக்கு சொந்தமானது தான். தற்போது பேரூராட்சிக்கு ஒப்படைக்க கேட்டு மனு கொடுத்துள்ளோம்.
பேரூராட்சிக்கு 9 சென்ட் இடம் தேவை. அதற்கான அனுமதி விரைவில் கிடைக்கும் என்றார்.
யாருக்கு சொந்தமான இடம் என தெரியாமலே பூமி பூஜையை பேரூராட்சி நிர்வாகம் நடத்தியது வேதனையானது.
விரைவில் இடத்தை பெற்று மேல்நிலை தொட்டி அமைக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.