/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம்
/
முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம்
ADDED : பிப் 05, 2025 07:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: புதிதாக தொழில் துவங்க விரும்பும் முன்னாள் படைவீரர்கள், அல்லது ராணுவப்பணியின் போது உயிரிழந்த வீரர்களின் மனைவிகள் தொழில் துவங்க முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தில் கடனுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் ரூ. ஒரு கோடி வரை கடன் பெறலாம். விண்ணப்பிப்பவர்கள் 21 வயது முதல் 55 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும்.
விருப்பமுள்ளவர்கள் படை விலகல் அடையாள அட்டை, ஆதார், கல்வி சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களுடன் பிப்.,20க்குள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.