/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
டிச.16ல் முன்னாள் படை வீரர் குறைதீர் முகாம்
/
டிச.16ல் முன்னாள் படை வீரர் குறைதீர் முகாம்
ADDED : டிச 14, 2024 06:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : மாவட்ட முன்னாள் படை வீரர்கள், தற்போது பணிபுரிவோர், அவர்கள் குடும்பத்தினர்களுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் டிச.16ல் தேனி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் காலை 9:30 மணிக்கு நடக்க உள்ளது.
கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில் முன்னாள் படை வீரர்கள், அவர்கள் குடும்பத்தினர் அடையாள அட்டை நகலுடன் குறைகள் குறித்த மனுவினை இரண்டு நகல்களாக நேரில் வழங்கி தீர்வு காணலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.