/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வணிகர் சங்கங்களின் பேரமைப்பு செயற்குழு
/
வணிகர் சங்கங்களின் பேரமைப்பு செயற்குழு
ADDED : நவ 27, 2024 08:32 AM
ஆண்டிபட்டி, : தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் தேனி வடக்கு மாவட்ட அனைத்து வணிகர் சங்கங்களின் செயற்குழு கூட்டம் ஆண்டிபட்டியில் நடந்தது.
மாவட்ட தலைவர் செல்வகுமார் தலைமை வகித்தார்.
ஆண்டிபட்டி நகர் தலைவர் பாண்டியராஜன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் திருவரங்கப் பெருமாள், மாநில துணைத்தலைவர் பெருமாள், மாநில இணை செயலாளர் காளிமுத்து, மாவட்ட பொருளாளர் கண்ணன் உட்பட பல பேசினர்.
நகர செயலாளர் முத்துப்பாண்டி, பொருளாளர் நாகராஜன், மாவட்டத் துணைத் தலைவர்கள் சுப்பு, ரமேஷ்குமார், இணை செயலாளர்கள் சர்வேஸ்வரன், விஸ்வநாதன் உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.