/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பன்னீர்செல்வத்துடன் நிர்வாகிகள் சந்திப்பு
/
பன்னீர்செல்வத்துடன் நிர்வாகிகள் சந்திப்பு
ADDED : ஆக 08, 2025 02:27 AM
பெரியகுளம்:முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு அமைப்பை துவக்கி நடத்தி வருகிறார்.
சமீபத்தில் பா.ஜ., கூட்டணியில் இருந்து விலகுவதாகவும் அவர் அறிவித்தார். இதனை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அமைப்பின் நிர்வாகிகள், தொண்டர்கள் பன்னீர்செல்வத்தை சந்தித்து வருகின்றனர். நிர்வாகிகளின் கருத்துக்களையும் அவர் கேட்டு வருகிறார்.
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தங்கியிருந்த அவரை நேற்று முன்தினம் இரவு திண்டுக்கல் மாவட்ட செயலாளர்கள் பசும்பொன், சுப்பிரமணியன், வைகைபாலன், சங்கரன்கோவில் மாவட்ட செயலாளர் மூர்த்தி பாண்டியன், தென்காசி, கன்னியாகுமரி உட்பட மாநிலத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் நிர்வாகிகள் அவரை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

