/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
எதிர்பார்ப்பு..: 15 வது நிதிக்குழு மானிய கடைசி தவணை வழங்கப்படுமா: நிதி நெருக்கடியில் தவிக்கும் ஊராட்சிகள்
/
எதிர்பார்ப்பு..: 15 வது நிதிக்குழு மானிய கடைசி தவணை வழங்கப்படுமா: நிதி நெருக்கடியில் தவிக்கும் ஊராட்சிகள்
எதிர்பார்ப்பு..: 15 வது நிதிக்குழு மானிய கடைசி தவணை வழங்கப்படுமா: நிதி நெருக்கடியில் தவிக்கும் ஊராட்சிகள்
எதிர்பார்ப்பு..: 15 வது நிதிக்குழு மானிய கடைசி தவணை வழங்கப்படுமா: நிதி நெருக்கடியில் தவிக்கும் ஊராட்சிகள்
ADDED : ஆக 16, 2025 02:52 AM

மாவட்டத்தில் பெரியகுளம், தேனி, ஆண்டிபட்டி, கடமலை மயிலை, போடி, சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம் உட்பட 8 ஒன்றியங்களில் 130 ஊராட்சிகள் உள்ளன. ஊராட்சிகளில் வீட்டு வரி, குழாய் வரி, தொழில்வரி உட்பட 6 வகையான வரி வசூலுக்கு ஏற்ப அரசு வழங்கும் மானிய நிதியையும் சேர்த்து பணியாளர்களுக்கு சம்பளம், பொதுமக்களுக்கு அடிப்படை வசதி திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதில் 2020-- 2025 வரை மத்திய 15 வது நிதிக்குழு மானியத்தில் ஊராட்சிகளில் மக்கள்தொகைக்கு ஏற்ப ஒரு ஆண்டுக்கு ரூ.12 லட்சம் முதல் ரூ.60 லட்சம் வரை, ஏப்ரல் மாதம் துவங்கி மூன்று மாதங்களுக்கு ஒரு முறை என நான்கு தவணைகளாக மார்ச் வரை வழங்கப்படுகிறது.
இந்த நிதியினை ஊராட்சி நிர்வாகங்கள் பொது சுகாதாரம், குடிநீர் பராமரிப்பு, ஊராட்சிகளில் தீர்மானத்தின் அடிப்படையில் பணிகள் தேர்வு செய்யப்படுகிறது. இதில் புதிதாக குடிநீர் குழாய் அமைத்தல், சுகாதார வளாகம் கட்டுதல், முந்தைய சுகாதார வளாகம் புதுப்பித்தல் உட்பட பல்வேறு அடிப்படை வசதிகளுக்கான கட்டமைப்பு பணிகள் நடக்கிறது.
நிதிவரவில்லை: மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் 300 க்கும் அதிகமான ஒப்பந்ததாரர்கள் உள்ளனர். இவர்களுக்கு பணிகள் முடிந்த பிறகு செய்த பணிகளுக்கு காசோலை வழங்கப்படும். 15 வது மத்திய நிதிக்குழு மானியத்தில் 2024- -2025க்குரிய நான்காவது தவணை மார்ச் மாதம் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் தற்போது ஐந்து மாதங்கள் ஆகியும் நிதி வழங்கவில்லை. இதனால் இந்த நிதியினை நம்பி மேற்கொண்ட வளர்ச்சி பணிகள் முடிந்தும் ஒப்பந்ததாரர்களுக்கு பணம் கொடுக்காமல் ஊராட்சி நிர்வாகம் தவிக்கிறது. இதனால் ஊராட்சி நிர்வாத்திற்கும் ஒப்பந்ததார்களுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. மேலும் 2025-- 2026 ம் ஆண்டுக்கு ஏப்.1ல் 16 வது நிதிக்குழு மானியம் திட்டம் துவங்காமல் உள்ளது. இதனால் ஊராட்சிகளில் அடிப்படை வசதி மேம்படுத்தும் புதிய பணிகள் தேர்வு செய்யப்பட்டும் கிடப்பில் உள்ளது.-