/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அனுபவ கற்றல் திறன் போட்டி இரு மாணவர்கள் தேர்வு
/
அனுபவ கற்றல் திறன் போட்டி இரு மாணவர்கள் தேர்வு
ADDED : பிப் 19, 2025 06:52 AM

தேனி : மத்திய அரசின் 'பிரேர்ணா உத்சவ்' திட்டம் சார்பில், தனித்துவ அனுபவ கற்றல் திறன் போட்டி நாடு முழுவதும் நடத்தப்படுகின்றன.
இப் போட்டிகளில் பள்ளிகளில் 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம்.
இதில் தேனி கோடாங்கிபட்டி பூர்ணவித்யா பவன் சி.பி.எஸ்.சி., சீனியர்செகன்டரி பள்ளியின் 9ம் வகுப்பு மாணவி கனிஷ்கா, போடி சிசம் பள்ளி பிளஸ் 1 மாணவர் ஆசிஷ் வெற்றிபெற்றனர்.இருவரும் தமிழ்நாடு மாநில பிரதிநிதியாக குஜராத், வாட் நகரில் ஏப்ரல் முதல் வாரத்தில் நடக்க உள்ள தனித்துவ அனுபவ கற்றல் திறன் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பினை பெற்றுள்ளனர்.
இவர்களை இரு பள்ளிகளின் முதல்வர்கள், நிர்வாகிகள் பாராட்டினர்.

